மேகி நூடுல்ஸ் உணவு பொருள் பற்றிய விளம்பர படங்களில் நடித்துள்ள இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்ட கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இவர்களை கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.
இது, திரைப்பட துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
ஒரு உணவு பொருளை, உணவு அமைப்பு அங்கீகரித்த பிறகே அது கடையில் விற்பனை செய்யப் படுகிறது. இந்த நிலையில், பிரபலங்கள் மீது எப்படி பழி போடுவீர்கள்?

கடையில், ஒரு பொருள் விற்கப் படுவதற்கு முன்பு அதை சோதனை செய்ய மாட்டார்களா? அதை நாம் தலைகீழாகத் தான் செய்வோமா?
முதலில் பொருள் வாங்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகுதான் சோதனை செய்வோமா? இவ்வாறு குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.