கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வாங்கிய கடனுக்காக பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளை விட 2 மடங்கு வயதுடைய வட்டிக்காரனுக்கு மணமுடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரிடம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டத்தைச் சேர்ந்த திருப்பதி, கிருஷ்ணவேணி தம்பதியினர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். ஆனால் குறித்த திகதியில் அவர்களால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வகுமார் 9-ம் வகுப்பு படித்து வரும் அவர்களின் மகளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் சம்மதிக்கவே, கடந்த செவ்வாய் அன்று தேனி மாவட்டத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டில் வைத்து பலவந்தமாக அந்த சிறுமிக்கும் செல்வகுமாருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியின் மாமா போலீசில் புகாரளித்ததையடுத்து,
நெடும்கண்டத்தைச் சேர்ந்த கேரள போலீசார் அந்த சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் தேனி மாவட்டம் வீரன்பாண்டிக்கு விரைந்துள்ளனர். இது குறித்து தமிழக போலீசாரிடமும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பெண்ணின் பெற்றோர் மற்றும் செல்வகுமார் என மூவர் மீதும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.