பெட்ரோல் பம்ப் வரலாறு: பெட்ரோல் நிரப்ப மீட்டருடன் கூடிய பம்பினை முதன் முதலில் 1905 இல் வடிவமைத்தவர், Sylvanus Bowser என்ற அமெரிக்கர்.
இது கையால் இயங்க கூடியது. பின்னர் 1933 இல் the Wayne Oil Tank & Pump Company, என்ற அமெரிக்க எண்ணை நிறுவனம் மோட்டாரில் இயங்கும்,
லிட்டர், விலை காட்டும் மீட்டருன் கூடிய மெக்கானிக்கல் பம்பினை வடிவைமைத்து காப்புரிமையும் பெற்றார்கள்.
அண்மையில் டிஜிட்டல் வரும் வரை ஓடியது இம்மெஷின் தான்.
இந்தியாவில் இன்றும் பல இடங்களில் ஓடிக் கொண்டு தான் இருக்கு. பெட்ரோல் பம்பில் ஏற்படும் ஜம்பிங் இரண்டு வகையில் ஏற்படும்,
#இயல்பானது
#தில்லு முல்லு ஜம்பிங்!
இயல்பான ஜம்பிங்:
பெட்ரோல் எளிதில் ஆவியாகக் கூடியது, எனவே சாதாரண அறை வெப்ப நிலையிலேயே ஆவியாகும்.
மேலும் வெப்பம் அதிகமான நிலையில் இன்னும் ஆவியாகும். பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்கில் பெட்ரோல் இருக்கும்.
வெப்பத்தினால் அதில் பெட்ரோல் ஆவியாகி இருக்கும். டேங்கில் வாயு நிலை பெட்ரோலை பிடித்து வைக்க ரிடெய்னர் மெக்கானிசம் உண்டு.
டேங்கில் ஆவி மேலும் ,திரவம் கீழும் இருக்கும், ஆனால் அதிக ஆவியாதல் நடக்கும் போது திரவத்தில் கரைந்தும் இருக்கும்.
தீக்காயத்திற்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள் !கார்பனேட்டட் சோடா போல. மேலும் டேங்கில் இருந்து டெலிவரி ஆகும் பம்ப் வரையில் இருக்கும் குழாயிலும் பெட்ரோலிய ஆவி இருக்கும்.
மீட்டர் பம்ப் மெசினில் இருக்கும் , பெட்ரோல் போட நாசில் உள்ள பம்ப் கன் இல் லீவரை அழுத்தியதும் மீட்டர் வழியாக முதலில் வருவது சிறிது பெட்ரோலிய ஆவியே.
சோடா பாட்டிலை திறந்ததும் புஸ்ஸென வேகமாக வாயு வெளியேறுவது போலவே பம்பிலும் வேகமாக வரும்,
சோடா பாட்டிலை திறந்ததும் புஸ்ஸென வேகமாக வாயு வெளியேறுவது போலவே பம்பிலும் வேகமாக வரும்,
கொரோனா வைரஸ் உடலில் இதன் மூலமாகவும் பரவுமாம்... ஜாக்கிரதை !
இதனால் மீட்டரில் ரீடிங் படக்கென ஓடும், இதுவே ஜம்பிங். இப்படி வரும் வாயு காற்றில் போனாலும் நாம அதுக்கும் சேர்த்து தான் காசு கொடுக்கணும்.
இயல்பான ஜம்பிங் எனில் மீட்டர் ஓடத் துவங்கும் ஆரம்பத்தில் மட்டும் வரும், தில்லு முல்லு ஜம்பிங் எனில் ஒவ்வொரு லிட்டருக்கும் ஒரு முறை ஜம்ப் ஆகும்.
இது வாயு தொல்லையால் வரும் ஜம்பிங், இன்னொரு ஜம்பிங்கும் இயல்பா வரக்வாய்ப் புண்டு.
காரணம் பம்ப் மெஷினில் மீட்டர் இருக்கும் அங்கு தான் அளக்கப் படுகிறது, ஆனால் மெஷின் டு நாசில் வரையில் இருக்கும்
குழாயிலும் எப்போதும் பெட்ரோல் இருக்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் மீட்டர் வழியாக வரும் போது குழாயில் இருக்கும்.
ஒரு லிட்டர் பெட்ரோலையே முதலில் நமது வாகனத்துக்கு அனுப்பும்.இப்படியே தொடர்ந்து பெட்ரோல் வரும்.
இப்போது டெலிவரி குழாயை பார்த்தீர் களானால் பல சுருள்களாக வளைந்து ,நெலிந்து கிடக்கும்.
இதனால் அதில் முழுவதும் பெட்ரோல் நிரம்பி இருக்காது உள்ளே கொஞ்சம் வெற்றிடம் இருக்கும்.
பூரான் கடியா? மருந்து உண்டு !
இது குழாயை நகர்த்தும் போது "flexing of tube" மூலம் வெற்றிடம் உருவாகும். எனவே மீட்டர் வழியாக வரும் பெட்ரோல் அதையும் நிரப்ப வேண்டும்.
அதனாலும் மீட்டரில் ஓட்டம் இருக்கும். ஆனால் அப்போது நமக்கு பெட்ரோல் வராது.
இப்படி வாயுவும், வெற்றிடமும் சேர்ந்து மீட்டர் ஓடத்துவங்கும் போது ஜம்பிங் ஆக்கும்.
ஆனால் இது முன் சொன்னது போல தொடர்ந்து பெட்ரோல் போடும் போதும் நிகழாது. பெட்ரோல் பம்ப் ஸ்டார்ட் ஆகும் போது மட்டும் நிகழணும்.
பொதுவாக இந்த மீட்டர் அமைப்பு சீல் செய்து இருக்கும், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் தான் கை வைக்க முடியும்.
எனவே அந்த பல்லுக்கான யூனிட் வேகமாக ஓடி தொகைக் காட்டும்.
எனவே டிஜிட்டல் எனப்படும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் பம்ப் மீட்டரில் எளிதாக திருத்தி அமைத்து விட முடியும்.
விலை ஏற்றம் செய்யும் போது விலையை சர்வரில் திருத்தி அமைத்தால் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பம்பிலும் உடனே அப்டேட் ஆகிவிடும்.
எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டது என சகலமும் பதிவாகி விடுமளவுக்கு பல நாடுகளில் இணைய தொழில் நுட்பத்தினைப் பயன் படுத்துகிறார்கள்.
எனவே மத்தியான உச்சி வெயிலில் பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டருக்கு பதில் 955 மிலி பெட்ரோல் விரிவடைந்து ஒரு லிட்டராக கிடைக்கவே வாய்ப்புள்ளது.
ஆகும் எனவே தான் எண்ணை நிறுவனங்கள் "evaporation and coefficient of thermal loss compensation" என 2% கூடுதல் எண்ணை கொடுத்து விடுவார்கள்.
மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள நிலத்தடி டேங்க்கில் இருந்தும் பெட்ரோலிய ஆவி டேங்கர் லாரிக்கு வரும்,
அந்த பம்பிலும் வழக்கமான முறையில் பாயிண்ட் பிடித்து போடுகிறார்கள்.
முழுக்க அழுத்தினால் முழுத் திறனில் வேகமாக மோட்டார் இயங்கி பெட்ரோல் நிரப்பும்.
இது இயல்பானது வெளி நாட்டில் உள்ள பெட்ரோல் பங்கிலும் நிகழும், என்ன தான் நவீன மெஷின் போட்டாலும் கட்டுப் படுத்த முடியாது.
இதில் வெகு குறைவாகவே பெட்ரோல் விரயம் ஆகும் நமக்கு. பெட்ரோல் நிறுவனங்களே இதை எல்லாம் கணக்கில் கொண்டு
"+ or- "1% (-.5 எனவும் சொல்கி றார்கள்) அளவில் தான் பெட்ரோல் அளவு இருக்கும் என அதிகாரப்பூர்வமாவே சொல்லி யுள்ளார்கள்.
ஒரு லிட்டர் வாங்கி அளந்துப் பார்த்தால் 990 மி.லி மட்டும் இருந்தால் வழக்கு கூட போட முடியாது. 1% என்பது அங்கீகரிக்கப் பட்ட முகத்தல் அளவை நிர்ணய பிழை ஆகும்.
தில்லு முல்லு ஜம்பிங்:
பெட்ரோல் பம்பில் இரண்டு வகையான மீட்டர் ஓடும், முதலில் எத்தனை லிட்டர் எனக்காட்டும் அடுத்து அதற்கு தொடர்பாக விலையைக் காட்டும்.
பழைய பம்பில் எல்லாமே மெக்கானிக்கல் முறை, டெலிவரிக்கு போகும் குழாயில் மீட்ட்ர் கருவி இருக்கும், அதனுடன் தொடர் புடையாதாக ஒரு கியர் அமைப்பு இருக்கும்.
அது ஒரு லிட்டருக்கு இத்தனை எண்ணிக்கை என சிறிய யூனிட்களாக பிரிக்கப் பட்டிருக்கும், பொதுவாக அளவுக்காட்டும் கியர் 10 யூனிட்களாக இருக்கும் ,
அது ஒரு லிட்டருக்கு இத்தனை எண்ணிக்கை என சிறிய யூனிட்களாக பிரிக்கப் பட்டிருக்கும், பொதுவாக அளவுக்காட்டும் கியர் 10 யூனிட்களாக இருக்கும் ,
அது 0-9 ஆகும், கியரில் ஒரு பற்சக்கரம் நகர்ந்தால் அளவுக் காட்டும் மீட்டரில் ஒரு யூனிட் நகர்ந்து காட்டும்.
அதற்கு ஏற்ப விலைக் காட்டும் பற்சக்கரம் காலிபரேஷன் செய்யப் பட்டு இருக்கும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூ எனில் ஒரு லிட்டரில் உள்ள 10 யூனிட் களுக்கு ஏற்ப சமமாக பிரிக்கப் பட்டிருக்கும் 74 ரூபாய்.
அதாவது ஒரு யூனிட் பெட்ரோல் ஓடினால் ரூ 7.4 என விலையில் காட்டும் வகையில் காலிபரேஷன் செய்வார்கள்.
இப்போது பெட்ரோல் விலை ஏறுகிறது எனில் மீட்டரில் பழைய விலையேவா காட்டும், அளத்தல் மீட்டரில் ஒரு லிட்டர் 10 யூனிட் என்பது அதே தான்.
ஆனால் விலையை மாற்ற வேண்டும் அல்லவா, எனவே விலையை மாற்றி ரீ- காலிபரேஷன் செய்யும் வசதியுண்டு.
ஞாபக மறதியை போக்கும் உணவுகள் !விலையேறியதற்கு ஏற்ப ரூபாயைக் காட்டும் கியரில் மாற்றம் செய்வார்கள்.
இப்படி மீட்டர் ரீடிங்கில் மாற்றம் செய்ய இருக்கும் வசதியைக் கொண்டு தான் தில்லுமுல்லு செய்து ஜம்பிங் செய்ய வைப்பார்கள்.
பொதுவாக இந்த மீட்டர் அமைப்பு சீல் செய்து இருக்கும், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் தான் கை வைக்க முடியும்.
ஆனால் திருடனும்னு முடிவு செய்துட்டா பயப்படுவாங்களா என்ன?
ஆட்டோ மீட்டர்ல சூடு வைப்பது என்று சொல் வார்களே அதுவும் இப்படித் தான் கிலோ மீட்டர் ஓடாமலே தொகை ஓடிக் காட்டும் :-))
சூடு வைப்பது என்று சொல்லக் காரணம், சால்டரிங் அயர்னால் மீட்டரில் உள்ள ஒரு சில கியர் பற்களை உருக்கி அழித்து விடுவார்கள்,
எனவே அந்த பல்லுக்கான யூனிட் வேகமாக ஓடி தொகைக் காட்டும்.
பெட்ரோல் பம்பில் உள்ளே திருத்தி அமைக்க வசதியும் இருப்பதால் சீலை உடைத்து மாற்றி யமைத்து விட்டு மீண்டும் சீல் செய்து விடுவார்கள்.
அதிரடியாக ரெய்டு செய்து பல சமயங்களில் பெட்ரோலிய அதிகாரிகள் கண்டுப் பிடித்தும் இருக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் எச்சரிக்கை, அபராதம் என முடிந்து விடும், எப்போதாவது லைசென்ஸ் கேன்சல் என போவதுண்டு.
பெட்ரோல் பம்ப் மெக்கானிசம்
இது மெக்கானிக்கல் பம்ப்பில், டிஜிட்டல் பம்ப்பிலுமா செய்வார்கள் எனக் கேட்கலாம்,
ஆனால் எந்தப் பம்பும் முழு டிஜிட்டல் கிடையாது, எலெக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர் ரீடிங்க் தான்.
கியர் அமைப்பில் பங்க் காரார்கள் கை வைக்க வில்லை என்றாலும் நாட்போக்கில் தேய்மானம் ஏற்பட்டு ஜம்பிங்க் ஆக வாய்ப்புண்டு.
எனவே அதற்கு மாற்றாக உருவானது தான் எலக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர்.
இதில் கியர் இல்லாமல் ஒரு சக்கரத்தினை மட்டும் வைத்து அதில் சில வண்ணக் குறியீடு, அல்லது ஸ்கேனர் படிக்கும் வகையில் குறியீடு செய்து இருப்பார்கள்.
ஒரு சக்கரம் முழு சுழற்சி 360 டிகிரி எனவே ஒரு சுழற்சியை 10 யூனிட் என சம டிகிரி அளவில் பிரித்து அதில் எலக்ட்ரானிக் ஸ்கேனர் படிக்கும் வகையில் குறியீடு செய்து விடுவார்கள்.
ஒரு லிட்டர் , 10 யூனிட் = 360 டிகிரி எனில்
ஒரு யூனிட் = 360/10 = 36 டிகிரி
அதாவது மீட்டரில் உள்ள சக்கரம் 36 டிகிரி சுழன்றால் ஒரு யூனிட் எனக்கணக் கெடுக்கும்.
பின்னர் அதற்கேற்ப லிட்டர், விலை எனக்காட்டும் வகையில் டிஜிட்டல் டிஸ்ப்ளே மட்டுமே.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?இந்த இடத்தில் பயன்படுவது "re programmable " கால்குலேட்டர் வகை சிப் தான் இருக்கும்.
பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம், அதற்கு ஏற்ப எளிதாக ரி. கேலிபரேஷன் செய்ய முடியும்.
எனவே டிஜிட்டல் எனப்படும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் பம்ப் மீட்டரில் எளிதாக திருத்தி அமைத்து விட முடியும்.
ரெய்டு வருகிறார்கள் என தெரிந்தால் மீண்டும் எளிதாக மாற்றி யமைத்து விட்டு நல்லப் பிள்ளை யாக உட்கார்ந்துக் கொள்ளலாம் :-))
இதற்கு எல்லாம் தீர்வே இல்லையா எனலாம் ,இருக்கு அது என்ன வெனில் இணைய வழி நெட் ஒர்க்கிங் செய்வது தான் எப்படி எனப் பார்க்கலாம்.
நம் ஊரில் பெட்ரோல், பம்ப், பெட்ரோல் பங்க் என எல்லாமே ஸ்டேண்ட் அலோன் வகை, மேலும் பெட்ரோல் நிறுவனங்களுக்கும் இணைப் பில்லை.
பெட்ரோல் விலை ஏறுகிறது என்று சொன்னால் முதல் நாள் இரவு ஒவ்வொரு பெட்ரோல் பம்ப் ஆக விலையை ஆட்களே மாற்றி யமைக்கணும், அதான் இங்குள்ள நடைமுறை.
ஆனால் உலக அளவில் தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் எப்படி எனில், பெட்ரோல் பம்ப்,
கம்பியில்லா இணைய வழி மூலம் அதன் பெட்ரோல் பங்கில் உள்ள கணினியுடன இணைக்கப் பட்டிருக்கும்.
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?அந்தக் கணினி அவர்களுக்கு பெட்ரோல் சப்ளை செய்யும் எண்ணை நிறுவன சர்வருடன் இணைந்து இருக்கும்.
எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாலும் பங்க் கணினி, எண்ணை நிறுவன சர்வர் என அனைத்திலும் பதிவாகி விடும்.
விலை ஏற்றம் செய்யும் போது விலையை சர்வரில் திருத்தி அமைத்தால் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பம்பிலும் உடனே அப்டேட் ஆகிவிடும்.
இப்படி நெட் ஒர்க் பெட்ரோல் பம்ப் ஆக இருப்பதால் இடையில் யாரும் திரிசமன் செய்ய முடியாது.
செய்ய வேண்டும் எனில் பெரிய கம்பியூட்டர் ஹேக்கராக இருந்தால் உண்டு. இப்படி இணைய வழி தொடர்பில் இருப்பதால் இன்னும் பல நன்மைகள் உண்டு.
வெளி நாடுகளில் எல்லாம் பெரும்பாலும் பெட்ரோல் போடுவது சுய சேவை தான்,
அப்படி எனில் பெட்ரோல் போட்டு விட்டு காசுக் கொடுக்காமல் போய் விட்டால் என்னாவது என நினைக்கலாம் அங்கே தான் கணினி கண்ணை தொறக்குது.
டெபிட் கார்ட், கிரடிட் கார்டு என எதையாவது உள்ளே செருகினால் தான் மெஷின் ஆன் ஆகும்.
பின்னர் பெட்ரோல் போட்டு விட்டு பெட்ரோல் கன்னை அதற்கான இடத்தில் வைத்தால் காசு எடுத்துக்கொண்டு, கார்டை துப்பி விடும் பெட்ரோல் பம்ப் :-))
கார்டு மட்டும் இல்லாமல் காசு போட்டும் இயக்கும் வகையிலும் இருக்கும். எவ்ளோ காசு போடுறிங்களோ அவ்ளோ பெட்ரோல் கொடுக்கும் வெண்டிங் மெஷின் வகை.
இன்னும் சில எண்ணை நிறுவனங்கள் பிரத்யோகமான ரேடியோ சிக்னல் ஐ.டி தருவார்கள்,
அது வாங்கி கார் கீ செயினில் அல்லது கார் டேஷ் போர்டில் வைத்துக் கொண்டால், அவர்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்கில் காசோ/கார்டோ இல்லாமல் பெட்ரோல் போட்டுக் கொள்ள முடியும்,
உங்கள் வங்கிக்கணக்கில் காசு எடுத்துக் கொள்ளப்படும். இதனை நிறைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆளே இல்லாத பெட்ரோல் பங்கில் வந்து பெட்ரோல் போட்டுக் கொண்டு அப்படியே கிளம்பி விடுவார்கள்,
என்னக் காசு கொடுக்காமல் போறாங்களே என நினைத்தி ருக்கலாம், ஆனால் இவ்வகை யான முழுவதும் ஆட்டொமேடிக் பங்குகள் அவை.
காரை சரியான இடத்தில் நிறுத்தினால் தானாக டேங்க் மூடி திறந்து பெட்ரோல் நிரப்பும் ரோபாட்டிக் பெட்ரோல் பங்குகள் கூட இருக்காம்.
ஒரு வாகனம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றால் அது என்ன வாகனம், எத்தனைக் கிலோ மீட்டர் ஓடியது,
எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டது என சகலமும் பதிவாகி விடுமளவுக்கு பல நாடுகளில் இணைய தொழில் நுட்பத்தினைப் பயன் படுத்துகிறார்கள்.
நம்ம ஊரில் கணினியில் அச்சடித்து டிக்கெட் தரும் அளவுக்கு திரையரங்குகள் எல்லாம் முன்னேறிய பிறகும்,
அனைத்து திரையரங்கு களையும் இணைத்து சென்ரலைஸ்டு பாக்ஸ் ஆபிஸ் உருவாக்க வில்லை.
அப்படி இருக்கும் போது எங்கே பெட்ரோல் பங்குகளை ஒன்றிணைக்க போறாங்க :-))
அப்படி இருக்கும் போது எங்கே பெட்ரோல் பங்குகளை ஒன்றிணைக்க போறாங்க :-))
பெட்ரோல் போடும் போது மேலும் கவனிக்க வேண்டியவை.
காலை அல்லது இரவில் பெட்ரோல் போடுவது நல்லது ஏன் எனில், ஏற்கனவே சொன்னது போன்ற வாயு தொல்லை அப்போது குறைவாக இருக்கும்.
இரண்டாவது வெப்ப விளைவு,
வெப்பத்தினால் பெட்ரோல் விரிவடையும், அப்போது அதன் அடர்த்தி குறையும்.
அடர்த்தி குறைவான பெட்ரோல் குறைவாக மைலேஜ் தரும் மேலும் அளவு வால்யும் அடிப்படையில் ஒரு லிட்டர் இருந்தாலும் குளிரும் போது வால்யும் குறைந்து விடும்.
அறை வெப்ப நிலையில் ஒரு லிட்டர் =1000 மி.லி இருக்கும் பெட்ரோல் 40 டிகிரியில் சுமார் 1045 மி.லி ஆகிவிடும்.
எனவே மத்தியான உச்சி வெயிலில் பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டருக்கு பதில் 955 மிலி பெட்ரோல் விரிவடைந்து ஒரு லிட்டராக கிடைக்கவே வாய்ப்புள்ளது.
வெப்பத் தினால் நீரினைப்போல 4.5 மடங்கு பெட்ரோல் விரிவடையும், இதனை "co efficient of thermal expansion" என்பார்கள்.
வாகனத் திற்கு போடும் போதே இழப்பு வெப்பமாதல், ஆவியாதல் மூலம் ஏற்படுகிறதே, அதே போல பெட்ரோல் பங்கிற்கும் ஆகாதா எனலாம்,
ஆகும் எனவே தான் எண்ணை நிறுவனங்கள் "evaporation and coefficient of thermal loss compensation" என 2% கூடுதல் எண்ணை கொடுத்து விடுவார்கள்.
ஏன் எனில் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கும் போது வாயு நிலை பெட்ரோலியம் டேங்கரில் தங்கி விடும்
மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள நிலத்தடி டேங்க்கில் இருந்தும் பெட்ரோலிய ஆவி டேங்கர் லாரிக்கு வரும்,
அவற்றை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் மீண்டும் "கண்டென்சேஷன்" செய்து பெட்ரோல் ஆக்கிக் கொள்வார்கள்.
பெட்ரோல் போடும் போது கடைசியில் அளவை நெருங்கும் போது விட்டு விட்டு லீவரை அழுத்தி பாயிண்டுக்கு கொண்டு வருவார்கள்.
அப்போது பெரும்பாலும் பெட்ரோல் நமது டேங்கிற்கே வராது, மீட்டரில் மட்டுமே நகரும், இதனை பாயிண்ட் அடிக்கிறது என்பார்கள்.
காரணம் குழாயில் உள்ள வளைவுகள், மற்றும் பெட்ரோல் கன் மேல இருக்கும், ட்யூப் கீழக்கிடக்கும்
மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா? அப்ப இத படிங்க !எனவே மெதுவாக விட்டு விட்டு பம்ப் மோட்டார் இயக்கும் போது பெட்ரோல் டேங்கிற்கு போக விசை கிடைக்காமல் குழாயில் இருக்கும் வெற்றிடத்திலயே அடங்கி விடும்.
அதிகப் பட்சம் சில துளிகள் தான் அப்போது நம் வண்டிக்கு வரும். எனவே ஒரே சீராக லீவரை பிடித்து பெட்ரோல் போட வேண்டும். அப்படி செய்ய மாட்டார்கள்.
பிற்சேர்க்கை:
கடைசியில் பாயிண்ட் பிடித்து போடுவதில் இழப்பு வருவதை தடுக்கவே பிரி செட் டெலிவரி அமைப்பு உள்ள பெட்ரோல் பம்புகள் கொண்டு வரப்பட்டது.
10 லிட்டர் என உள்ளீடு செய்து விட்டு பெட்ரோல் கன்னை அழுத்திக் கொண்டு இருந்தால் போதும் 10 லிட்டர் வந்ததும் தானாக பம்ப் இயக்கம் நின்று விடும்.
இத்தகைய பெட்ரோல் பம்ப்களை சென்னையில் பல இடங்களில் காணலாம்.
ஆனால் நம்ம ஊரு பங்கர்கள் ஒவ்வொரு முறையும் அழுத்தி உள்ளீடு செய்ய சோம்பல் பட்டுக் கொண்டு
அந்த பம்பிலும் வழக்கமான முறையில் பாயிண்ட் பிடித்து போடுகிறார்கள்.
பெட்ரோல் பங்கில் அப்போது தான் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கி நிரப்பியி ருந்தார்கள் என்றாலும் பெட்ரோல் போடுவதை தவிர்க்க வேண்டும்,
ஏன் எனில் நிலத்தடியில் பலகாலமாக பெட்ரோல் சேமிக்கப் படுவதால் நிறைய தூசு, வண்டல் என இருக்கும்.
அவை அனைத்தும் பெட்ரோல் நிரப்பும் போது கலங்கி விடும், எனவே அதனை வண்டியில் நிரப்பி ஓட்டினால் அதிக புகை வரும்.
பில்டர் அடைத்துக் கொள்ளும், ஸ்பார்க் பிளக்கில் கரி அதிகம் படியும்.
சில பெட்ரோல் பங்குகள் சரியான பராமரிப்பு இல்லாமல் எப்போதுமே தூசுடன் பெட்ரோல் விற்கிறார்கள், அது போன்ற இடங்களை தவிர்க்கவும்.
முழு டேங்க் பில் செய்வதாக இருப்பின் பெட்ரோல் கன் முனையை பெட்ரோல் தொடும் முன் நிறுத்தி விட வேண்டும்.
ஏன் எனில் பெட்ரோல் கன்னில் ஓவர் புளோ தடுக்க ஒரு அமைப்பு உள்ளது,
முனை பெட்ரோலில் மூழ்கினால் ஓவர் புளோவ் எனக்கருதி மீண்டும் பெட்ரோலை திரும்ப உறிஞ்சி விடும் ஆனால் மீட்டரில் ஓடிய அளவு குறையாது.
அப்படி எடுத்த பெட்ரோல் வேறு குழாய் வழியாக நிலத்தடி டேங்கிற்கு சென்று விடும். இந்த மெக்கானிசம் நம் நாட்டில் உள்ளதா என்பது சந்தேகமே.
கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு முழுடேங்க் பில் செய்வதாயின் மெதுவாக பெட்ரோல் பிடிக்க சொல்ல வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு பெட்ரோல் பம்புக்கும் வேக அளவு உண்டு.
அதாவது ஒரு நிமிடத்திற்கு இத்தனை லிட்டர் என. அதற்கான ஆக்சிலரேட்டர் இருப்பது பெட்ரோல் கன்னில் உள்ள லீவரில்,
முழுக்க அழுத்தினால் முழுத் திறனில் வேகமாக மோட்டார் இயங்கி பெட்ரோல் நிரப்பும்.
அப்படி செய்யும் போது மீட்டர் வேகமாக ஓடும், ஜம்பிங் திருத்தம் செய்து இருந்தால் கண்டுப் பிடிக்க முடியாது.
பெட்ரோல் பம்ப் வேகமாக ஓடுவதால் நுரைத்துக் கொண்டு வரும் காரணம் நிறைய ஆவியுடன் வருவதால் எனவே வழக்கத்தினை விட அளவு குறையும்.
மேலும் நிறைய காற்றும் கலந்து விடுவதால் சமயங்களில் ஏர் லாக் ஆகும் வாகனம்.
அப்புறம் வழக்கமான ஸீரோ செய்து போடுவது, கலப்படம் எல்லாம் பார்த்து கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது தான்.
நல்ல பெட்ரோல் பங்கினை கண்டறிய எளிய வழி, டிராவல்ஸ் நடத்து பவர்கள், ஆட்டோ, டாக்சி என பெட்ரோல் போடும் பங்குகளாக பார்த்து தேர்வு செய்வது தான்.
அவர்கள் எப்போதும் மைலேஜில் கண்ணாக இருப்பார்கள். இத்தனை லிட்டருக்கு இத்தனை கிலோ மீட்டர் இந்த கார் போகும் என கணக்கு போட்டு தான் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
அவங்க போட்ட லிட்டருக்கு ஏற்ப மைலேஜ் வரலைனா உடனே கண்டுப் பிடிச்சு, பெட்ரோல் தான் காரணம் எனில் இடத்தை மாற்றி விடுவார்கள்.