தமிழ், தெலுங்கு பட உலகில் சதா முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழில் ஜெயம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அறிமுகமாகி விக்ரமின் "அந்நியன்" படத்தில் பிரபலமானார்.
இந்தி, கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘எலி’ படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதில் நடிப்பது குறித்து சதா கூறியதாவது : -
"வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடித்த போது அவருடன் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அப்போது அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
எலி படத்தின் கதையும் எனது கேரக்டரும் மிகவும் பிடித்தது. எனவே நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டரில் நடிக்க நடிகைகள் பலர் விரும்புகிறார்கள்.
எனக்கு அப்படி நடிப்பதில் ஆர்வம் கிடையாது. அது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும்போது படத்தின் மொத்த சுமையையும் கதாநாயகிதான் சுமக்க வேண்டும்.
படம் ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்த நடிகையை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
எனவேதான் அது போன்ற படங்களில் நான் நடிப்பது இல்லை." இவ்வாறு சதா கூறினார்.