இந்தியா – இலங்கை இடையே பாலம் கட்ட மத்திய அரசு பரிசீலனை!

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே சாலை வழி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
 
இந்த வழிதடம் இந்தியாவில் உள்ள தனுஷ்கோடிக்கும், இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் இடையே 23 கிலோமீட்டருக்கு அமைய உள்ளது.

இந்த சாலை இணைப்பு பாக் ஜலசந்திக்கு குறுக்கே கடல் பாலம் மற்றும் கடல் அடி நீர் குழாயாக இரு வழி போக்குவரத்து தடமாக அமைய உள்ளது. இந்த கடல் அடி நீர் குழாய் வழியாக கப்பல் போக்குவரத்தும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 23 கிலோமீட்டர் கடல்பாலம் டிரான்ஸ் சார்க் எனப்படும் சார்க் நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ளதாக மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார்.

தரைவழி மற்றும் ரயில்வழி திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் செயலாக்க வாய்ப்பை அறிக்கையாக அளித்துள்ளது. தற்பொழுது இதே 23 கிலோ மீட்டர் தடம் படகு வழி போக்குவரத்தாக அமையபெற்றுள்ளது.

இதுமட்டுமில்லாமல் வடகிழக்கு மாநிலங்களை, மியான்மர் வழியாக தாய்லாந்துடன் சாலை வழியாக இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
Privacy and cookie settings