ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உலகின் மிகவும் சொகுசான அதே சமயம் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பென்ஸ் காரை அந்நிறுவனம் வாங்கி யுள்ளது.
அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்தக் கார், ஜெர்மனியில் உள்ள ஆலையில் விசேஷமாக தயாரிக்கப் பட்டுள்ளது. இது எஸ் 600 கார் மாடலாகும்.
இந்தக் காரில் லெவல் 9 தடுப்பு அரண் (விஆர்9) உள்ளது. இது தான் காரில் அதிகபட்ச பாது காப்பு வசதியாகும். இந்தக் கார் ஜெர்மனியில் சின்ட்லிங்யான் ஆலையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கார் நேற்று மும்பை மத்திய பிராந்திய போக்குவரத்து அலு வலகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு 2013-ம் ஆண்டிலிருந்து அளிக்கப்படு கிறது.
இருப்பினும் அவரின் உச்சபட்ச பாதுகாப்பைக் கருதி இந்தக் காரை அந்நிறுவனம் வாங்கி யுள்ளது. பென்ஸ் எஸ் 600 மாடல் காரின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாகும். அதில் லெவல் 9 பாதுகாப்பு வசதி, இறக்கு மதிக்கான சுங்க வரி ஆகிய வற்றோடு காப்பீடு செலவும் கூடும்.
2015-ம் ஆண்டு மாடலில் எஸ் 600 வி-9 மாடல் கார் இந்தியாவில் பயன்படுத்தப் படுவது இதுவே முதலாவ தாகும். நடிகர் அமீர் கான் 2014-ம் ஆண்டு மாடல் காரை பயன் படுத்துகிறார். ஆனால் இதில் வி-9 பாதுகாப்பு வசதி கிடையாது.