கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி: வலங்கைமான் மாணவர் கண்டுபிடிப்பு !

1 minute read
வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா நார்த்தாங்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இவரது மகன் ஜெகதீசன்(12). நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.

 மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடல் அலைகள் மூலம் தொடர் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இக்கருவியில் முன்னும் பின்னும் நகரும் வகையில் ஒரு டிரம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த டிரம்மில் அலை மோதும்போது, டிரம்மோடு இணைந்த சக்கரம் சுழல்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் கருவியுடன் இணைந்த பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

‘நாடு முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் இக்கருவியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி வினியோகிக்கலாம்’ என்று கூறுகிறார் ஜெகதீசன்.

திருச்சியில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் ஜெகதீசனின் படைப்பும் இடம் பெற்று 2வது இடம் பிடித்தது. ஜெகதீசனின் கண்டுபிடிப்புக்கு அறிவியல் ஆசிரியர் சுந்தரமூர்த்தி வழிகாட்டியாக இருந்தார்.

மாணவரை பள்ளி தலைமையாசிரியை நிர்மலா ராஜலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் கிரிஜா, பூங்கொடி ஆகியோர் பாராட்டினர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings