சாலையில் இருந்த பள்ளத்தில் தோன்றிய‌ முதலை !

பெங்களூரில் உள்ள பிரதான சாலை ஒன்றில் இருந்த பெரிய பள்ளத்தில் முதலை ஒன்று கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.


பெங்களூரில் உள்ள சுல்தான்பாள்யா பிரதான சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பாதல் நஞ்சுண்டசாமி (36) என்ற ஓவியர், ஃபைபரில் செய்யப்பட்ட 12 அடி நீளம் உள்ள ஒரு பெரிய முதலையை அந்த பள்ளத்தில் போட்டுள்ளார்.

மேலும் அந்த முதலையை சுற்றி வண்ண களவைகளையும் தூவியதால் அது பார்ப்பதற்கு குளம் போல் காட்சியளித்தது.

இதனால் அங்கு கூட்டம் கூடியதோடு, பொம்மை முதலையால் ஏற்பட்ட பரபரப்புக்கு பிறகு அந்த பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இது குறித்து நஞ்சுண்டசாமி கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு இந்த குடிநீர் பைப் உடைந்தது.

அதன் பிறகு பெய்த மழை மற்றும் போக்குவரத்தால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

மேலும், அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முயற்சி செய்யாததால் தான் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings