தங்கச்சி பாப்பாவை மடியில் வைத்து கொஞ்சும் குட்டி இளவரசர் !

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பா சார்லட்டை தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்து கொஞ்சிய போது எடுத்த புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.
தங்கச்சி பாப்பாவை மடியில் வைத்து கொஞ்சும் குட்டி இளவரசர் !
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த மே மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைக்கப்பட்டதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது.

இந்நிலையில் கென்சிங்டன் அரண்மனை குட்டி இளவரசியும், அவரின் அண்ணன் இளவரசர் ஜார்ஜும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் ஜார்ஜ் தனது தங்கையுடன் சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இளவரசி சார்லட் பிறந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தங்களின் நன்றியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings