உத்திரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கி மோட்டார் சைக்கிளில் கட்டி 100 மீற்றர் தூரம் இழுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த ஹைதர்கான் என்ற பத்திரிகை நிருபரை, நேற்று முன்தினம் 4 பேர் கும்பல் தாக்கியது.
அதுமட்டுமல்லாமல் அவரை மோட்டார் சைக்கிளில் கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஹைதர்கான் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வீட்டில் இருந்தபோது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய நபர், கொள்ளை வழக்கு ஒன்றை கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் விபத்தில் சிக்கி போராடி வருகிறார் என்றும் அவரை காப்பாற்ற நான் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நான் அங்கு சென்றபோது என்னை 4 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கினர். துப்பாக்கியால் என் தலையில் அடித்ததோடு, என்னை மோட்டார் சைக்கிளில் கட்டி காரில் இருந்தபடியே 100 மீற்றர் வரை இழுத்து சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ஷாஜன்கான்பூர் மாவட்டத்தில் நிருபர் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதையடுத்து, இரண்டாவதாக மற்றொரு மற்றொரு நிருபரும் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.