டெல்லியில் ஐஎப்எஸ் அதிகாரியாக பார்வையற்ற பெண் !

சென்னையைச் சேர்ந்த பார்வை யற்ற பெண், ஐஎப்எஸ் அதிகாரி யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். 
 ஐஎப்எஸ் அதிகாரியாக டெல்லியில் நேற்று பதவியேற்றுக் கொண்ட பினோ செபைனை பாராட்டும் அமைச்சர் ஜிதேந்திர சிங். படம்: பிடிஐ
டெல்லியில் நேற்று நடந்த விழா வில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் வாழ்த்து தெரிவித்தார். 

சென்னை வில்லிவாக் கத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் பினோ செபைன் (25). இவர் கடந்த ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய தேர்வுகளை எழுதி வெற்றி பெற் றார். 

தரவரிசையில் 343-வது இடம் பிடித்த அவர் ஐஎப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் ஐஎப்எஸ் அதிகாரி யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் வாழ்த்து தெரிவித்தார். 

இதற்கு முன்பு பினோ செபைன் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்று, லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 

மத்திய வெளியுறவுத்துறையில் முழுமையாக பார்வையற்ற ஒருவர் அதிகாரியாக பதவியேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். 
Tags:
Privacy and cookie settings