வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வலங்கைமான் வெற்றிலை!

மனித வாழ்வில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆலய வழிப்பாடுகளிலும் திருவிழாக்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலை நம் முன்னோர்கள் பழங் காலத்தில் பெண் பார்க்கும் படலம்


 நடைப் பெறும் பொழுது பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இரண்டு வெற்றிலை ‘ஒரு கொட்டைபாக்கு’ ஒரு ரூபாய் நாணயம் வைத்து

இருவரும் மாற்றி கொண்டால் அந்த திருமணம் நிச்சயிக்க பட்டதாகி விடும். அந்த இடத்தில் இந்த வெற்றிலை முக்கிய பொருளாக அங்கம் வகிக்கிறது.

தென்னிந்தியாவில்தான் அதிகம் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுவதோடு கிராமபுற மக்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் வெற்றிலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் கோவிந்தகுடி, ஆவூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் வெற்றிலைகள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.

திரைப்படங்களிலும், திரைப்பட பாடல்களிலும் பேசப்படும் கும்பகோணம் வெற்றிலை இங்கிருந்து விளைவிக்கப்பட்டுதான் கும்பகோணம் நகருக்கு விற்பணை செய்யப்படுகிறது.

மேலும் இவை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பணை செய்யப்படுகிறது.

இந்த வெற்றிலைகள் ஆவூரில் 15 ஏக்கரிலும், கோவிந்தகுடியில் 25 ஏக்கரிலும் பயிர்செய்யப்பட்டுள்ளது. கோவிந்தகுடியில் வெற்றிலை பயிர்செய்யும் விவசாயிகள் சங்கம் அமைத்து அதில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 இந்த வெற்றிலை பயிரின் விளைச்சல் காலம் 3 வருடம் ஆகும். இந்த வெற்றிலை பயிர் செய்வதற்கு முன்பாக இரண்டடி ஆழத்திற்கு சிறு சிறு வாய்க்கால்களாக மண் எடுத்து அதில் அகத்திகீரைகளை முதலில் பயிர்செய்து

அவை வளர்ந்து 6 மாதம் ஆனப்பிறகு வெற்றிலைக்கொடிகளை முக்கால் அடிக்கு 1 வெற்றிலை செடி என பதியம் செய்து அவைகள் வளர்ந்து கொடிபோல் ஏறுவதற்கு வசதியாக குச்சிகள் வைத்து கட்டி

நீர்பாய்ச்சி உரமிட்டு பூச்சிகொல்லிமருந்துகள் அடித்து விளைவிக்கின்றனர். வெற்றிலை விளைவிக்கும் இடத்தை கொடிக்கால் என்று அழைக்கிறார்கள்.

தினமும் ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் தற்போது இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை மேலும் தினக்கூலி கூடுதலாக தரவேண்டிய நிலையை சந்திக்க வேண்டியுள்ளது என்றும்,

ஒரு ஏக்கருக்கு 3 வருடத்திற்கு வெற்றிலை பயிர் செய்ய இரண்டு லட்சம் வரை செலவு ஆகிறது என்கிறார்கள். இவையெல்லாம் போக வெற்றிலை விற்கின்ற விலையை பொறுத்து லாபம் கிடைக்கும் என்றும் 100 வெற்றிலைக்கொண்டது.

1 கவுலி அது இன்றையவிலை 20 முதல் 30 வரை வெற்றிலையின் தரத்தை பொறுத்து ஏற்றம் இறக்கம் இருக்கும். திருமண நாட்களில் விலை கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

கோவிந்தகுடி வெற்றிலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அன்வர் கூறும்போது,

அரசாங்கம் மற்ற பயிர்கள் நெல், கரும்பு வாழை போன்ற பயிர்களுக்கு கடன் வசதி காப்பீட்டு வசதி போன்ற வசதிகள் செய்துகொடுப்பது போல் எங்களுக்கும் செய்து கொடுத்தால் இந்த தொழில் இன்னும் சிறப்பாக செய்யமுடியும் என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings