தமிழ்நாட்டில் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஹெல்மெட்
ஒரு தலைச்சுமை என குறிப்பிட்டுள்ள பா.ஜ.க., எம்.எல்.ஏ., ஒருவர், ஹெல்மெட்களை அணிந்தபடி குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் நேற்று சாலை பாதுகாப்பு தொடர்பான நிக்ழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில பா.ஜ.க., எம்.எல்.ஏ.வான பவானி சிங் ரஜாவட் என்பவர், ‘இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் ஒரு தலைச்சுமையாக உள்ளது.
ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்கும் போக்குவரத்து போலீசார் மக்களை மிகவும் தொல்லைக்குள்ளாக்குகின்றனர்.
அவர்களுக்கு அசவுகரியம் என்று கருதுபவர்கள் ஹெல்மெட் அணிய தேவையில்லை. போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டி குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஹெல்மெட்கள் உதவுகின்றன’ என்று கூறியுள்ளார்.