கின்னஸ் சாதனை படைத்த 'இஞ்சி இடுப்பழகி'

உலகின் சிக்கன இடையழகி என்ற பட்டத்தையும் கின்னஸ் உலக சாதனையையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளார் கேத்தே ஜங் (75). இவரது இடையின் சுற்றளவு வெறும் 15 அங்குலம் மட்டுமே.


இவரது உயரம் 5 அடி 8 அங்குலம். தற்போது 39" - 15" - 39" என்ற உடலமைப்பில் உள்ள இவருக்கு 1959ம் ஆண்டு திருமணமான போது இடையின் அளவு 26 அங்குலமாக இருந்தது.

கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் படிப்படியாக 22 அங்குலமாக குறைத்த இடையை மேலும் இழைத்து 15 அங்குலமாக இவர் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இதற்காக நூற்றுக் கணக்கான இடுப்பு பட்டைகளை வைத்துள்ள இந்த இஞ்சி இடுப்பழகி, அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்.
Tags:
Privacy and cookie settings