டயரில் காற்றை திறந்து விட்டதால் நடுவழியில் நின்ற அரசு பஸ்!

நீடாமங்கலத்தில் அரசு பஸ்சின் டயரில் காற்றை திறந்து விட்டதால் நடுவழியில் நின்றது. பஸ்சை மறித்த கார்கள் காவிரி ஆற்றில் கர்நாடகம் புதிய அணைகளை கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 


 திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கடைகள் திறக்கப் படவில்லை.

நீடாமங்கலத் திலும் கடைகளும் மூடப்பட் டிந்தன. நேற்று காலை 7.45 மணி அளவில் நாகப்பட்டி னம்-திருப்பூர் அரசு பஸ் நீடாமங்கலம் கடைத்தெருவில் சென்று கொண்டிருந்தது. அப்போது 2 கார்கள் திருப்பூர் பஸ்சை வழி மறித்தனர்.

நடுவழியில் நின்ற பஸ்

பின்னர் அந்த கார்களில் இருந்து 10 பேர் கொண்ட ஒரு கும்பல் இறங்கி, கோஷம் போட்டபடி பஸ்சின் அருகே வந்தனர். இதையடுத்து பஸ்சின் முன்பக்கம் இருந்த ஒரு டயரின் வால்வை பிடுங்கி னர்.

இதனால் டயரில் காற்று இறங்கி பஸ் அப்படியே நின்றது. பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதை யடுத்து அந்த பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் வேறு ஒரு பஸ்சில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு போலீசாரின் உதவியுடன் வேறு டயர் மாற்றப்பட்டுபஸ் நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இச்சம் பவம் காரணமாக நீடாமங் கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings