கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

வலங்கைமானை அடுத்த நீடாமங்கலத்தில் கர்ப்பிணி பெண்களுக் கான சிறப்பு மருத்துவ முகாமை ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.


சிறப்பு மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலத்தை அடுத்த கோவில் வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப் பிணி பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட் டார மருத்துவ அதிகாரி தினேஷ் முன்னிலை வகித் தார்.

முகாமில் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் இலக்கிய ராஜா, டாக்டர்கள் நித்யா, காமேஷ், தமிழ்க்கொடி ஆகி யோரை கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் 56 கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றன. 30 பேர் தேர்வு இதில் மேல் சிகிச்சைக்கு 30 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெயசேகரன், டாக்டர் செந்தில்கணேஷ், மாவட்ட காசநோய் நல அலுவலர் அம்புஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை கோவில் வெண்ணி அரசு ஆரம்ப சுகா தார நிலைய பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:
Privacy and cookie settings