வீதியில் மாம்பழம் விற்கும் பிரபல அரசியல்வாதியின் மகள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகள், தெருவில் மாம்பழம் விற்பனை செய்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரிய முண்டா என்பவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்.
அவர் 8 முறை எம்.பி-யாகவும், 4 முறை மத்திய அமைச்சராகவும், 2 முறை எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், வயலில் இறங்கி விவசாயம் செய்வதை விட்டுவிடவில்லை.

ஆசிரியையாக பணிபுரியும் அவரது மகள் சந்திரவதி சாரு, மாலை நேரங்களில், தெருக்களில் மாம்பழங்களை விற்று வருகிறார்.

இதுகுறித்து சந்திரவதி சாரு கூறுகையில், எங்களுடைய தோட்டத்தில் உள்ள, மாமரங்களில் இருந்து, அதிகளவில் மாம்பழங்கள் கிடைக்கின்றன.

தேவைக்கு போக, எஞ்சிய மாம்பழங்களை தெருக்களில் விற்பதால் கிடைக்கும் பணத்தை, ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்துகிறேன்.

ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில், மாவோவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், கல்வி கற்று, உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன்.

மேலும், இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings