வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஒன்றியக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.


கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையர் சேகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:– அன்பரசன் (தி.மு.க.) :– 

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஆவூரில் மருத்துவருடன் கூடிய மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்தை தற்போது மூட உள்ளனர்.

இதை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குருமூர்த்தி (ஒன்றியக்குழு துணைத்தலைவர்):– 

ஆவூர் மருந்தகம் தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநடப்பு 

அன்பரசன் (தி.மு.க.):– ஆவூரில் உள்ள மருந்தகம் மூலாழ்வாஞ்சேரி, ஊத்துக்காடு, ஏரிவேளூர், கோவிந்தகுடி உள்ளிட்ட கிராம மக்களுக்கு பெரிதும் பயன் அளித்து வருகிறது.

இதை மூடினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மருந்தகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. விவாதத்தை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், இந்திராஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானம் 

கூட்டத்தில் தமிழகத்தின் முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்று கொண்டதற்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இதில் அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பிரபாகரன், சங்கர், வேலாயுதம், சுமதி, கீதா, ரஷ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings