உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான "நெஸ்லே" நிறுவனத்தயாரிப்பான மேகி நூடுல்சில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் மற்றும்
நெறிமுறை களில் குறிப்பிடப் பட்டுள்ள அளவை விட காரியத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நாடு முழுவதும் கண்டுபிடிக்கப் பட்டது.
இதனால் உத்தரகாண்ட், உ.பி., டெல்லி, புதுச்சேரி, குஜராத், தமிழ்நாடு, பீகார், தெலுங்கானா மாநிலத்தில் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்துக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்து, இன்று அந்நிறுவனத்தில் சர்வதேச தலைமை செயல் அதிகாரி பால் பல்கே விளக்கமளித்தார்.
அப்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகியை தரமானது. மக்கள் உண்பதற்கு ஏற்றது என்று தெரிவித்த அவர், இந்தியாவில் தரமாக உற்பத்தி செய்யப்படுவது போலவே உலகம் முழுவதும் மேகி உற்பத்தி செய்யப்படுகிறது.
எனினும் மக்கள் குழப்பான மனநிலையில் உள்ளதால் மேகி நூடுல்சை திரும்ப பெறுகிறோம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை காத்திருப்போம்.
நூறு வருடங்களாக இந்த சந்தையில் நாங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். காரியம் உள்ளதாக புகார் வந்த உடன் ஆயிரம் தொகுதிகளில் நாங்கள் சோதனை நடத்தினோம்.
அதில் ஒன்றில் கூட காரியம் காணப்படவில்லை என்று கூறிய பல்கே எங்களது பங்குகளின் விலை குறைவதை பற்றி கவலைப்படவில்லை. மக்களின் நம்பிக்கை குறைவதை பற்றித்தான் கவலைப்படுகிறோம் என்றார்.
எங்களின் அனைத்து தொழிற்சாலைகளையும் சோதனையிட அதிகாரிகள் முன்வந்தால் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்றும் பல்கே கூறினார்.