போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வலங்கைமானை அடுத்த நீடாமங்கலம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடியில் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரத்தை தாண்டும்.
தாலுகாவின் தலைநகரமாக விளங்கும் நீடாமங்கலத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களும், மத்திய அரசின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன.
நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வரு கிறது.
இதனால் நீடாமங்கலம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள ரெயில் நிலையம் தஞ்சாவூர், திருச்சி போன்ற மாநகரங் களுக்கு செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த ரெயில்வே வழித்தடம் நாகப்பட்டினம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை யின் குறுக்காக அமைந்து இருப்பது நீடா மங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற் படுவதற்கு முக்கிய காரணம்.
7 மணிநேரம் பாதிப்பு
மன்னார்குடி -மானாமதுரை, காரைக்கால்- திருச்சி, திருச்சி-காரைக்கால் உள்ளிட்ட பயணி கள் ரெயில்கள், மன்னார்குடி-சென்னை, மன் னார்குடி- கோயம்புத்தூர், காரைக்கால்- எர்ணா குளம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாள் தோறும் நீடாமங்கலத்தை கடந்து செல் கின்றன.
அதேபோல திருப்பதி எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், கோவா எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரெயில்களும் நீடாமங்கலம் வழியாக செல்லும் முக்கிய ரெயில்கள் ஆகும்.
சரக்கு ரெயில்களும் நாள்தோறும் நீடாமங்கலத்தை கடந்து செல்கின்றன. இவ்வாறு ரெயில்கள் செல்வதால் நீடாமங்கலம், ஆதனூர், வையகளத்தூர், கப்பலுடையான், சம்பாவெளி, ஒரத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ரெயில் கேட்டுகளை அடிக்கடி மூட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறு கிறது.
சுற்றுலா பயணிகள்
திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகப்பட்டி னம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேரா லயம்,
நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல நீடாமங்கலம் மைய பகுதியாக திகழ்வதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் போது வாகனங்களில் வரும் சுற்றுலா பயணி களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இவர்களை போல பஸ்களில் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி படாதபாடு படுகிறார்கள்.
பொதுமக்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நீடாமங்கலத்தில் பொது கழிவறை வசதியும் போதுமான அளவு இல்லை. இதுவும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ரெயில்வே மேம்பாலம்
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடா மங்கலம் நகரில் மேம்பாலம் கட்ட மாநில அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. அதே நேரத்தில் மத்திய அரசின்ரெயில்வே துறை ரூ.44 கோடியே 95 லட்சம் அனுமதித்தாக தெரிகி றது.
தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குவதாக அறி வித்ததை தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மேம்பாலம் அமைப் பதற்கான வரைபடங்களை தயாரித்து தென்னக ரெயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் காண்பித் தனர்.
அப்போது நகரின் குடியிருப்பு பகுதிக்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலம் அமைக்கப்படும் என கூடுதல் பொதுமேலாளர் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள் “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவ தும், போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி திணறுவதும் தொடர்கதையாக உள்ளது. ரெயில்வே மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதாக கூறினார்கள்.
ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. மேம்பாலம் அமைக்க சில ஆண்டுகளாகும் என்பதால் தற்காலிக போக்குவரத்துக்கு வசதி யாக கீழ்ப்பாலம் அமைப்போம் என கூறினார்கள். எதுவும் நிறைவேறவில்லை.
கிளரியம் பாலம்
நீடாமங்கலம் வடக்கு வீதியில் இருந்து பழைய நீடாமங்கலம் வழியாக கிளரியம் பாலம் வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை குறித்து வெளியூர் பயணிகளுக்கு தெரிய வில்லை. இந்த மாற்றுப்பாதை குறித்து விளம்பர பலகையும் நீடாமங்கலத்தில் இல்லை.
ரெயில்வே கேட் மூடப்படும்போதும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலம் நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.