குறுவை தொகுப்பு திட்டம் மூலம் மண்வளம் மேம்படுத்தப்படும் அதிகாரி தகவல்

 வலங்கைமான் குறுவை தொகுப்பு திட் டம் மூலம் மண்வளம் மேம்படுத்தப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் கூறினார்.


நாற்று நடும் பணி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மை கோட்டத்தில் சிறப்பு குறுவை தொகுப்பு உதவி திட்டத்தின் கீழ் எந்திரம் மூலம் விலை யில்லா நாற்று நடும் பணி தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி வலங்கை மானை அடுத்த பூந்தோட்டம் சாத்தனூர் கிராமத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், எந்திரம் மூலம் நாற்று நடும் பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார். நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மை உதவி இயக்கு னர் தேவேந்திரன் கூறியதா வது:-

வெண்ணாறு கோட்ட பகுதியை சேர்ந்த வயல்களில் குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் மண் வளம் மேம்படுத் தப்படும். இதன் காரணமாக நெல் பயிர்கள் செழித்து வளரும்.

கூடுதல் மகசூல் பெறு வதற்கும் மண்வள மேம்பாட்டு பணிகள் உதவும். இதே திட் டத்தில் பசுந்தாள் உரத்தை சாகுபடி செய்வதற்கான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

செலவு இல்லாமல்...

குறுவை தொகுப்பு திட் டத்தின் கீழ் விவசாய பணி களை விவசாயிகள் செலவு இல்லாமல் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்த வயல்களில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிப்பதற்கான செலவு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத் தப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மோகன்ராஜ், மாணிக்கம், செந்தில், சிவலிங்கம், மணி மாறன், அட்மா திட்ட அலு வலர் மயிலாண்டநாயகம் மற் றும் பலர் கலந்து கொண்ட னர். 

நன்றி - தினத்தந்தி
Tags:
Privacy and cookie settings