உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த பணக்காரர்கள் சிலர், அந்த கிராமத்தை சேர்ந்த பிரிமா என்ற பெண்ணின் நிலத்தை தரக்கோரி வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை, அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவரை நிர்வாணமாக்கி ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர்.
இந்த கொடுமைகளை அடுத்து அந்த பெண் பொலிசில் புகார் அளிக்க சென்றபோது, அந்த செல்வந்தர்களின் செல்வாக்கால் அந்த புகாரை பொலிசார் வாங்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் இறுதியாக பல்ராம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டுள்ளார்.
இதனை அறிந்த மாஜிஸ்திரேட், உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து துளசிபூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. புகாரை வாங்க மறுத்த பொலிஸார் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதோடு இருவரும் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பெண் இதுபற்றி கூறுகையில் :- இது என்னுடைய நிலம் அதை என்னிடம் இருந்து பறிக்க முடியாது.
மேலும், நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்றும் தற்போது எனது நிலத்தை அபகரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.