மிகப்பெரிய கண்ணாடி குடுவை போன்று கடலுக்கு அடியில் மைதானம் !

0 minute read
துபாயில் உலகின் ஆழமான டென்னிஸ் மைதானம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. கடல் மட்டத்துக்கு அடியில் மிகப்பெரிய கண்ணாடி குடுவை போன்று அமைத்து, அதில் டென்னிஸ் மைதானம் அமைக்க திட்ட மிடப் பட்டுள்ளது.
மிகப்பெரிய கண்ணாடி குடுவை போன்று கடலுக்கு அடியில் மைதானம் !
போட்டி நடக்கும் போது பார்வை யாளர்கள் கடலுக்கு அடியில் மற்றும் கடல் மட்டத்துக்கு மேல் இருந்தும் மீன்களை கண்டு களிக்கலாம்.

இதை போலந்து கட்டட கலை நிபுணர் கிரிஸ்டப் கோட்டாலா, 30, வடிவமைத்துள்ளார்.

இத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நிதி உதவியை, உள்ளூர் வீரர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் இருந்து அவர் எதிர்பார்த்துள்ளார்.

துபாயில் பர்ஜ் அல் அராப் ஹொட்டலின் மேல் பகுதியில் உலகின் மிக உயரமான (650 அடி) டென்னிஸ் மைதானம் அமைந்துள்ளது.

தற்போது இந்த ஹொட்டலுக்கு அருகில் உலகின் ஆழமான டென்னிஸ் மைதானம் அமையவுள்ளது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings