சச்சின் டெண்டுல்கரின் ”பாரத ரத்னா” விருதை திரும்ப பெற வேண்டும் !

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.

இந்நிலையில், போபாலை சேர்ந்த வி.கே.நேஸ்வர் என்பவர், மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களில் தோன்றி சில நிறுவனங்களின் பொருட்களை பரிந்துரைக்கிறார்.

இது பாரத ரத்னா விருதுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விருது பெற்றவர்கள் விளம்பர படங்களில் நடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings