ஹொலிவூட்டின் புகழ்பெற்ற இளம் நடிகையான ஜெனிபர் லோரன்ஸ் புதிய கின்னஸ் சாதனை யொன்றை படைத்துள்ளார். ஜெனிபர் லோரன்ஸ் உட்பட அமெரிக்க பொழுது போக்குத்துறை
மற்றும் விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் பலரின் நிர்வாண புகைப்படங்கள் திருடப்பட்டு இணையத்தளங்களில் சில படங்கள் வெளியாகியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இப்புகைப்படங்களுக்கும் ஜெனிபர் லோரன்ஸின் பெயர் கின்னஸ் சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கும் தொடர்பு எதுவுமில்லை.
மாறாக, உலகில் மிக அதிக தொகையை வசூலித்த அக்ஷன் திரைப்படத்தின் கதாநாயகியாக அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
24 வயதான ஜெனிபர் லோரன்ஸ் நடித்த ஹங்கர் கேம்ஸ் எனும் திரைப்பட வரிசையின் இரு படங்கள் உலககெங்கும் 250 கோடி டொலர்களுக்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளன.
அதேவேளை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்த ஒரேயொரு ஹொலிவூட் நட்சத்திரம் ஜெனிபர் லோரன்ஸ் அல்லர்.
பிரபல பாடகியும் நடிகையுமான பியோன்ஸே நொவெல்ஸ் மிக வேகமாக விற்பனையான ஐரியூன் அல்பத்துக்காக கின்னஸில் இடம்பெற்றுள்ளார்.
பியோன்ஸே எனும் அவரின் பெயரிலேயே கடந்த வருடம் வெளியிடப்பட்ட அல்பமொன்று முதல் 3 தினங்களில் 828, 773 பிரதிகள் விற்பனையாகிமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்காவின் மற்றொரு சர்ச்சைக்குரிய பாடகியான மைலி சைரஸ், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பொப்பிசை நட்சத்திரமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
பாடகி கெத்தி பெரி, டுவிட்டர் இணையத்தளத்தில் அதிகம் பின் தொடர்பவர் களை (ஃபொலோவர்) கொண்டிருப்பவர் என்ற சாதனைக்குரியவராகியுள்ளார்.
கொலம்பிய பாடகியும் ஸ்பானிய கால்பந்தாட்ட வீரர் ஜெரார்ட் பிகேயின் மனைவியுமான ஷகீரா பேஸ் புக் இணையத்தளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டவராக விளங்குகிறார்.
அவரின் பேஸ் புக் பக்கத்தை 10 கோடிக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். கடந்த வருடம் அதிக பேஸ்புக் விசிறிகளைக் கொண்ட ஹொலிவூட் நட்சத்திரமாக பாடகி ரிஹானா விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிபரின் நிர்வாணப் படங்கள் கண்காட்சியில் இதேவேளை நடிகை ஜெனிபர் லோரன்ஸின் ஐபோன் வலையமைப்பிலிருந்து திருடப்பட்டு இணைத்தளங்களில் வெளியிடப்பட்ட அவரின் நிர்வாணப் புகைப்படங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள கலைக்கூடமொன்றில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜெனிபர் லோரன்ஸ் அறிவித்திருந்த நிலையில் ஜெப் ஹமில்டன் எனும் கலைஞர் மேற்படி பரபரப்பு அறிவிப்பை வெளியிடட்டுள்ளார்.