வயலில் தண்ணீர் தேங்கியதால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை !

வலங்கைமான் அருகே பருத்தி வயலில் தண்ணீர் தேங்கியதால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வயலில் தண்ணீர் தேங்கியதால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை !
பருத்தி சாகுபடி 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த சித் தன்வாழூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜாராமன் (வயது38).

விவ சாயி. இவர் இதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தி சாகுபடி செய்து இருந்தார்.

நேற்றுமுன் தினம் வயலுக்கு சென்ற ராஜா ராமன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இந்த நிலையில் வயல் பகுதியில் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகே பூச்சி மருந்து (விஷம்) பாட்டில் கிடந்தது.

இதை பார்த்த அவ ருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ராஜா ராமனை உடனடியாக கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.
தற்கொலை 

அங்கு பரிசோதித்த டாக்டர் கள் ராஜாராமன் இறந்து விட் டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீ சார் ராஜாராமனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

விசாரணை யில் கடன் வாங்கி பருத்தி சாகுபடி செய்து இருந்த நிலை யில் வயலில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றதால் ராஜாராமன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண் டது தெரியவந்தது.
Tags:
Privacy and cookie settings