மிர்புரில் நடைபெற்ற இந்திய- வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
அபாரமாக விளையாடிய வங்கதேச அணியை இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டியுள்ளார்.
வங்க தேச அணி உண்மையான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிக் காட்டியது. குழு உணர்வுடன் ஆடிய அந்த அணி வீரர்கள் முதல் பந்தில் இருந்து கடைசி பந்துவரை ஓட்டங்கள் எடுக்க முயற்சித்தனர்.
மழை குறுக்கிட்டதால்தான் வங்கதேசத்தின் ஓட்ட வேகம் குறைந்தது. இல்லையென்றால் அவர்கள் 330 ஓட்டங்களை எட்டியிருப்பார்கள்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவு பந்துவீசவில்லை. சுழற்பந்து வீச்சுதான் கைகொடுத்தது. அதே போல் துடுப்பாட்டத்திலும் சொதப்பியதால் தோல்வியை தவிர்க்க முடியததாகி விட்டது.
கடந்த உலகக்கிண்ண போட்டியில் இருந்தே வங்கதேச பந்துவீச்சின் தரம் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.