விண்வெளியில் டிரையத்லான் செய்து சாதனை படைத்த சுனிதா !

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.


விண்வெளி ஆய்வு கூடத்தின் கமாண்டர் ஆகவும் பொறுப்பு ஏற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் டிரையத்லான் விளையாட்டு போட்டி நடந்தது.

டிரையத்லான் என்பது ஒரே நேரத்தில் ஓட்டம், சைக்கிள், நீச்சல் என்று 3 போட்டியும் கலந்தது. அந்த விளையாட்டை அதே நேரத்தில் விண்வெளியில் நிகழ்த்தி சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்தார்.

அதற்காக சிறப்பாக வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஓடாத நிலையான சைக்கிள், ஓடுவதற்கு வசதியான டிரெட்மில் எந்திரம் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தினார். இதன் மூலம் 0.8 கி.மீற்றர் தூரம் நீந்தியும், 28.9 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டியும், 6.4 கி.மீ தூரம் ஓடியும் சாகசம் நிகழ்த்தினார்.

அதற்காக அவர் 1 மணி 48 நிமிடங்கள் மற்றும் 33 வினாடிகள் எடுத்துக் கொண்டார். இவர் ஏற்கனவே அதிகமுறை விண்வெளியில் நடந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings