மத்திய பிரதேச மாநிலத்தில் சத்ராபூர் அருகே கணேஷ்புரா என்னும் கிராமம் இருக்கிறது. இங்கு வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு இடத்திற்கு சென்று தண்ணீர் பிடிப்பது வழக்கம்.
அப்படி ஒரு பெண் தண்ணீர் பிடிக்க செல்கையில் அந்த பெண்ணின் நிழல் அங்கு இருந்த உயர் ஜாதியைச் சேர்ந்த புரான் என்பவன் மீது பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புரான் தன் சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளான்.
இதையடுத்து ஒன்று சேர்ந்த பெண்கள் அந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். மேலும் இனிமேல் இந்த பக்கம் வந்தால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து புரான் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.