மிர்பூர் ஒருநாள் போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுன் ஏற்பட்ட மோதல் குறித்த டோனி விளக்கம் அளித்துள்ளார். மிர்புரில் நடைபெற்ற
இந்த தொடரில் இந்தியா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில், 24.2 வது ஓவரில் டோனி ஓட்டங்கள் எடுக்க முயன்றபோது ரஹ்மான் குறுக்கே வந்து மோதியுள்ளார். இதனால் ரஹ்மான் கீழே விழுந்து களத்தை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து டோனி கூறியதாவது, பந்துவீச்சாளர் ரஹ்மான் நான் விலகி ஓடுவேன் என்று நினைத்திருந்தார், ஆனால் நானோ அவர் விலகுவார் என்று நினைத்தேன்.
ஆனால் இருவருமே அதைச் செய்யாததால் மோதிக்கொண்டோம், ஏனெனில் ஓட்டங்களை முடிக்க நான் அருகாமையான பாதையைத்தான் தெரிவு செய்யவேண்டும்.
மோதாமல் பந்துவீச்சாளர்களை சுற்றி ஓடும்போதுதான் துடுப்பாட்ட வீரர்களை அவர்கள் ஆட்டமிழக்க செய்கின்றனர். எனவே ஒன்று நான் வலது புறம் நகர்ந்து ஓடியிருக்க வேண்டும், அல்லது அவர் இடது புறமாக ஒதுங்கியிருக்க வேண்டும்.
ஆனால் இருவருமே அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்து நடக்காமல் போனதால் ஒரு வகையான தெருச்சண்டை போல் ஆகிவிட்டது.
ஆனால் நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை, நானும் காயமடையவில்லை. இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்றும் பந்துவீச்சாளரிடம் இதுபற்றி பேசினேன் எனவும் கூறியுள்ளார்.