இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தயார் செய்வதற்கு தடை !

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு "மோனோ சோடியம் குளுட்டாமேட்"
இந்தியாவில் மேகி நூடுல்ஸ்
என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது.

இதில் அதிக அளவு காரீயம் உப்பு கலந்து இருப்பதாக தெரியவந்தது. இதனால் டெல்லி, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் தங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் இன்று 9 வகையான மேகி நூடுல்ஸ்களை இந்தியாவில் தயார் செய்வதற்கு தடை விதித்து ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்துக்கு சிக்கல் மேலும் வலுத்துள்ளது.

இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேகி நூடுல்சில் எவ்வித குறைபாடும் காணப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings