மீண்டும் சர்ச்சையில் சிக்கியது நெஸ்லே.. பால் பவுடரில் பூச்சிகள் !

கோவையில் நெஸ்லே செரலக் பால் பவுடரில் பூச்சிகள் இருந் தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறது நெஸ்லே பொருட்கள். ரசா யனப் பொருட்கள் அதிகளவில் கலந் துள்ளதாக கூறி 
நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட, பெரும் சர்ச்சை யில் சிக்கியது நெஸ்லே.

இதன் தொடர்ச்சியாக நெஸ்லேவின் ‘நான் ப்ரோ 3′ பால் பவுடர் சர்ச்சை யில் சிக்கியது. கோவையில் நெஸ்லே பால் பவுடரில் உயிருடன் 22 புழுக்களும், சிறிய புழுக்கள் 28ம் என மொத்தம் 50 புழுக்கள் இருந்தது ஆய்வில் உறுதி செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நெஸ்லே செரலக் எனும் குழந்தைகளுக் கான பால் பவுடர் சர்ச்சையில் சிக்கி யுள்ளது. கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஶ்ரீராம் என்பவர் தனது

 ஒரு வயது குழந்தைக்காக நேஸ்லே செரலக் பால்பவுடரை கடந்த ஞாயிற்றுக் கிழமை அப்பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வாங்கி யுள்ளார்.

நேற்று மாலை குழந்தைக்கு கொடுக்க அந்த பால் பவுடர் பாக்கெட்டை ஶ்ரீராமின் மனைவி ப்ரீத்தி திறந்துள்ளார். அப்போது பால் பவுடர் பாக்கெட்டினுள் ஏகப்பட்ட பூச்சிகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக ஶ்ரீராமிடம் அவர் தெரிவிக்க, வீட்டுக்கு வந்த ஶ்ரீராம் குழந்தை உணவு பொருளான பால் பவுடர் பாக்கெட் முழுவதும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, நெஸ்லேவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அவர்கள் முறையான பதில் தராததால், இன்று காலை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலகத்தில் ஶ்ரீராம் புகார் தெரிவித்தார். “அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும். தரமான பொருட்கள் என்ற அடிப்படையில்தான் பொருளை வாங்குகிறோம்.

குறைந்த பட்சம் குழந்தைகளுக்கான பொருட்களிலாவது தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் புகார் தெரிவித்தார்.

புகாரினை பெற்றுக்கொண்ட உணவு பாதுகாப்பு தரநிர்ணய அதிகாரி கதிரவன், “இந்த நெஸ்லே செரலக் பால் பவுடர் பாக்கெட் சோதனைக்கு அனுப்பப்படும். சோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்,” என்றார்.

குழந்தைகளுக்கான பால்பவுடர் பாக்கெட்டில் புழுக்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings