குழந்தைகளின் பசியைப் போக்க சீறுநீரகங்களை விற்ற தந்தை !

கூலி தொழிலாளியான ரமேஷ்பாய் நந்த்வானாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தை யோகிதாவுக்கு 5 வயதாகின்றது.
குழந்தைகளின் பசியைப் போக்க
இவளது உடல் எடை 75 பவுண்டு. இரண்டாவது மகள் அனிஷாவுக்கு 3 வயது. இவளது உடல் எடை 105 பவுண்டு, ஒன்றரை வயதாகும் மூன்றாவது ஆண் குழந்தை ஹர்ஷின் எடை 35 பவுண்டு. 

இவர்கள் மூன்று பேரும் "பிரேடர்-வில்லி ஸிண்ட்ரோம்" என்ற கொடூரமாக அதிகமாக பசி எடுக்கும் அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சாப்பிட்ட உணவு சிறிது நேரத்துக்குள் செரிமானமாகி விடுவதால், மீண்டும் பசி எடுத்து உணவு கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் இவர்களின் தாயார் முழுநேரமும் சமையலறையிலே கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்களது தாயார் கூறுகையில் :- காலையில் 30 சப்பாத்தி, 1 கிலோ காய்கறிகளை இவர்களுக்காக செய்கிறேன்.

இருப்பினும் இவர்களது பசி தீரவில்லை. எப்போது பார்த்தாலும் பசி எடுக்கிறது என்று அழுகை சத்தாமாய் இருக்கும். அதனால் நான் சமையலறையிலே கிடக்கிறேன் என்று கவலையாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழைத் தொழிலாளியான ரமேஷ்பாய் நந்த்வானாவால் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து இவர்களின் பசியை போக்க முடியவில்லை.

எனவே, தனது இரு சீறுநீரகங்களில் ஒன்றை விற்று பிள்ளைகளின் பசிநோயை போக்கவும், அவர்களின் உடல் பருமனை குறைக்கவும் ரமேஷ்பாய் நந்த்வானா முடிவு செய்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings