விழாவின் போது மைத்துனருக்கு முத்தம் கொடுத்த அண்ணி !

அலிகாரில் பேஸ்புக் மூலம் இருவர் காதலித்து , இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டனர் . இருவருக்கும் திருமணம் கோலாகலமாக ஏற்பாடு செய்து இருந்தனர் .
 
திருமணம் நடக்கும் சமயத்தில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர் . தீடிரென்று யாரும் எதிர்பாராத விதமாக மணமகனின் அண்ணி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தார் .

முத்தம் கொடுத்தது மட்டும் இல்லாமல் அவரை இழுத்துக் கொண்டு அனைவரும் நடமாடும் இடத்துக்குச் சென்று ஒரு ஆட்டமும் போட்டார் .

இதை சற்றும் எதிர்பாராத இரு வீட்டாரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் .

இதை பார்த்த மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . வாக்குவாதம் பெரிதாகி இரு வீட்டாரும் அடி தடி சண்டையில் ஈடுபட்டனர் .

மணமகள் வீட்டார் மாப்பிள்ளையை சிறை பிடித்து வைத்துக் கொண்டனர் .பின்னர் ஒரு நாள் கழித்து மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையை மீட்டனர் .
Tags:
Privacy and cookie settings