வலங்கைமானில் உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் வலங்கைமான் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் கும்பகோணத்திற்கு படிப்பதற்கும், வேலைகளுக்கும்,


தினசரி ஏராளமான பயணிகள் கும்பகோணம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருப்பினும் காலை– மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அரசுத்துறை பணிகளுக்கு செல்வோர் அதிகமாக இருப்பதால்

இப்பகுதியில் இருந்து கும்பகோணம் செல்வோர் பேருந்து வசதி குறைவினால் வெகுநேரம் நின்று கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

மாணவ–மாணவிகள் இளைஞர்கள் எப்டியாவது ஒடி பேருந்தில் ஏறி பயணித்தாலும் வயதானவர்கள் செல்லவேண்டிய பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் பயணிகள் நெரிசலை குறைக்க அரசு போக்குவரத்து துறை சார்பில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகபடுத்திட வேண்டும்.

குடந்தை மன்னார்குடி சாலையில் தொடர்ந்து பஸ் இயக்க முடியாவிட்டாலும் காலை, மாலை வேளைகளில் கும்பகோணம், நீடாமங்கலம் வரையாவது பேருந்துகள் சென்று வரும்படி செய்தால் மாணவ–மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மாணவ மாணவிகள் பேருந்துகளுக்காக காத்திருந்து பள்ளி கல்லூரி சென்று திரும்பி வருவதற்குள் அவர்களுக்கு கல்வியின் மீது அதிருப்தி ஏற்படும் வகையிலும் நித்தமும் போராட்டமாகவும் இருக்கிறது.

இதில் உயர்நிலைப்பள்ளி படிக்கும் சுற்றுபுற கிராம மாணவ மாணவிகளை பேருந்துகளை நிறுத்தி ஏற்றி செல்லாததால் அவர்கள் பெரும் கஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு பேருந்துகளை கூடுதலாக இயக்க வலங்கைமான் பகுதி வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings