மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கருத்தை திரும்ப பெறும் வரை மத்திய மந்திரி பொன்.ரதாகிருஷ்ணனை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : –
பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தி காவிரி படுகை விவசாயத்தையும், பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்
என்ற நோக்கத்தோடு அனைத்து விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் உணர்வையும், அச்சத்தையும் புரிந்து கொண்டு தமிழக அரசும் மீத்தேன் திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன், மீத்தேன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்கள் தேவையற்றது.
இத்திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் போராட்டத்தையே தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள். அரசியல் பிழைப்பிற்காக இந்த போராட்டங்களை நடத்துகிறார்கள்.
விமானங்களில் விபத்து ஏற்படுகிறது என்றால் பயணிக்காமல் இருப்பார்களா?’’ என விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்து உள்ளார்.
வேதனையில் ஆழ்த்தி உள்ளது ஏற்கனவே தஞ்சையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவோம்
என கூறி இருந்த மத்திய மந்திரி மீண்டும் இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் போட்டியிட்ட பா.ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றார்கள்.
எனவே மக்கள் மத்தியில் உண்மையை மறைத்து பொன். ராதாகிருஷ்ணன் மந்திரி பதவியை பெற்று உள்ளார்.
மந்திரி பதவியை பயன்படுத்தி விமானத்தில் மக்களை மறந்து விட்டு செல்கின்ற வாய்ப்பை அவர் பெற்று இருப்பதால் விமான விபத்தையும், விவசாயிகளின் வாழ்வுரிமையையும் ஒப்பிட்டு பேட்டி அளித்து இருக்கிறார்.
போராட்டம் எனவே மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பா.ஜனதா கட்சியின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மண்டலத்தில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்.
இப்படிப்பட்ட மோசமான திட்டத்தை ஆதரித்துள்ள பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு பதில் சொல்லி விட்டுத் தான் காவிரி டெல்டாவிற்குள் நுழைய வேண்டும்.
இந்த கருத்தை திரும்ப பெறும் வரை பொன்.ராதாகிருஷ்ணனை கண்டித்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து
காவிரி டெல்டாவில் தொடர் போராட்டங்களை காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக காவிரி விவசாயிகள் சங்க மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி நகர தலைவர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.