சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது சாலையில் சென்ற நபர் மீது கம்பி பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழ ந்துள்ளார்.சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகி ன்றன.
இந்நிலையில், பரங்கிமலை, ஜிஎஸ்டி சாலை பகுதியில் இன்று வழக்கம் போல பணிகள் நடந்த போது கம்பி திடீரென சரிந்துள்ளது. அப்போது, அந்த வழியாக பைக்கில் சென்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த கிரிதர் என்ற பொறியி யலாளர் தலையில் கம்பி சொருகி யுள்ளது.
6 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட அந்த கம்பி ஹெல் மெட்டையும் உடைத்து தலைக்குள் சொருகியதால், ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து உயிரிழ ந்துள்ளார். மேலும், இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.