கோவையில் கே.எப்.சி சிக்கனில் புழுக்கள் !

கே.எப்.சி உணவகத்தில் இருந்து வாங்கப் பட்ட சிக்கனில் புழு இருந்தது ஆய்வக சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டதைத் தொடர்ந்து, குற்றப்பத் திரிகை தாக்கல் செய்வதற்கான
பணிகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப் பாட்டுதுறை அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர்.

கோவை ரெட்பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யாஷர். இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கே.எப்.சி கடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கன் வாங்கி சென்றுள்ளார்.

அதில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கோவை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ஆய்வக பரிசோதனைக்காக சிக்கன் அனுப்பி வைக்கப்பட்டதில், சிக்கனில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை கோவை நீதிமன்றத்தில் ஒருவாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கோவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அதிகாரி கதிரவன் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings