இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்ட்டியில் இருக்கும் கான்வே தீவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2013-ம் ஆண்டு மார்பழகை எடுப்பாக காட்டும் அறுவை சிகிச்சைக்காக போலாந்து நாட்டுக்கு சென்றார்.
அங்கு தள்ளுபடி திட்டத்தில் ஒரு டாக்டரிடம் ஆபரேஷன் செய்து கொண்ட அவரது மார்பகங்கள் ஏற்கனவே இருந்த இயற்கையான தோற்றத்தை இழந்துப் போனதை அறிந்த
டான் மூரே என்ற அந்தப் பெண் மீண்டும் இங்கிலாந்தில் இருந்து போலாந்துக்கு சென்று அதே டாக்டரிடம் நடந்ததை கூறி முறையிட்டார்.
மேலும் ஒரு ஆபரேஷன் செய்து வயிற்றினுள் ஒரு ‘டம்மி டக்’ (வயிற்றுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கும் கருவி) வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என அந்த ‘கத்துக்குட்டி’ டாக்டர் கூற,
சுமார் 4 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்து அந்த ஆபரேஷனையும் செய்து கொண்டார்.
ஆனால், அவரது போதாதவேளை, வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட டம்மி டக் உள்ளேயே வெடித்து, சிதற, தற்போது ஊனமுற்றவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
மனித சதையை அரித்து தின்னும் பாக்டீரியா தொற்றும் இவருக்கு ஏற்பட்டுள்ளதால் வயிற்றின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள பையுடன் இவரது வாழ்நாள் கழிந்து வருகின்றது.
முன்னழகை எடுப்பாக காட்டிக் கொள்ள துடிக்கும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இவர் ஆகி விட்டார் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.