தங்க நாற்கரச் சாலைகள், நான்கு வழிப் போக்குவ ரத்து... என்று சாலை வசதிகள் மேம்படுத் தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதேசமயம், விபத்து களின் எண்ணி க்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஏன்? வாகனங் களின் வேகம், பராமரிப்பு இல்லாமை என்றெல்லாம் சொல்லப் பட்டாலும், முக்கியமான காரணம் அதுவல்ல. போக்கு வரத்து விதிகளை நாம் சரிவரப் பின்பற்று வதில்லை என்பதுதான் முதல் காரணம்!
எப்படி? இந்த விபத்துக்களில் பாதிக்கப்ப டுபவர்களில், பெரும்பாலோர் வாகன ங்களில் பயணிப் பவர்கள் அல்ல; பாதசாரிகள் - நடந்து செல்பவர் கள் தான் என்கிறது ஒரு புள்ளி விபரம்.
இவர்கள் எப்படி விபத்துக்கு ஆளாகிறா ர்கள்? கவனித்துப் பார்த்தால் நம்மிடை யே உள்ள அலட்சியம் தெரியும். நடந்து செல்லும் போது, முன்னும் பின்னும் கவனித்து த்தான் நடக்க வேண்டும்.
மூவராக, நால்வராக சேர்ந்து பேசி க்கொண்டு நடப்பது, காதில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு பேசியபடியே செல்வது, அந்தப் பேச்சு சுவார ஸ்யத்தில் சிக்னலைக் கவனி க்காமல் சாலை யைக் கடப்பது...
இதுபோன்ற தவறுகள் தான் பாதசாரிகள் விபத்துக்கு உள்ளாகக் காரணமா கின்றன.
அதேசமயம், வாகன ஓட்டிகளின் கவனமும் மிக அவசியம். விரைவாகச் செல்வது என்பது, விபத்துக்கு உள்ளாகாத அளவுக்கு வேகம் என்றுதான் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், அதீத வேகத்துடன் வண்டியைச் செலுத்தினால், சட்டென்று நிறுத்த முடியாது. நிறுத்த வேண்டி வந்தாலோ, வண்டி கவிழவும், விபத்தில் சிக்கவும் நேரிடும்.
தவிர, நெடுஞ்சா லைகளில் செல்லும் போது, முன்னால் செல்லும் வாகனத் தை முந்த, ஓவர்டேக் செய்ய முற்படும் போது, வலப்பு றமாகச் செல்ல வேண்டும்.
மாறாக, இடது புறமாக ஓவர்டேக் செய்ய முனைவது பெரும் தவறு. அதேபோல, மிதவே கமாகச் செல்பவர்கள் சாலையின் இடது புறமாகச் செல்வது விபத்தைத் தவிர்க்க உதவும்.
இவை அனை த்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. பயணத்தை திட்ட மிட்டவுடன், கிளம்பும் நேரத்தை முடிவு செய்யவேண்டும்.
செல்லும் இடமும், பயணிக்கும் தூரமும், அடைய வேண்டிய நேரமும் நமக்குத் தெரியும். அதனால், முன்ன தாகவே கிளம்பி, நிதானமாகப் பயணித்து, பத்திரமாகச் சென்று சேரலாம்.
‘சீக்கிரம் கிளம்புதல், நிதானமாகப் பயணித்தல், பத்திரமாய் சென்று சேர்தல்’ என்பதை, பயணத்தின் தாரக மந்திரமாக அமைத்துக் கொண்டால், நம் பயணங்கள் பத்திரமாக நிகழும்.
அதற்கான முயற்சி நம் செயல் பாட்டில் தான் இருக்கிறது. நாம்தான் திட்ட மிடவும் வேண்டும்; அதைச் செயல் படுத்தவும் வேண்டும்.
இந்தத் திட்ட மிடலும், செயல்ப டுத்தலும் நம்முடைய நன்மை க்காக மட்டுமல்ல; மற்றவர்களின் பாதுகாப்புக்கா கவும் தான்! செய்யலாம் தானே!