ஷாலினியின் தங்கையும் அஜீத்தின் மச்சினிச்சியுமான ஷாம்லியை நினைவிருக்கிறதா... குழந்தை நட்சத்திரமாக கொடி கட்டிப் பறந்த அவர் வளர்ந்த பிறகு சில படங்களில் தலை காட்டினார்.
அஜீத் நடித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனில் சின்ன வேடத்தில் வந்தார். சில தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்தார்.
2009-ல் ஒய் என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததோடு, காணாமல் போயிருந்த ஷாம்லி, தன் அக்காவின் கணவர் மூலம் பெரிய வாய்ப்புகளுக்கு முயற்சி செய்தார்.
ஆனால் அஜீத் இதனை ஊக்குவிக்கவில்லை. சொந்த முயற்சியில் வாய்ப்புகளைப் பெறவும் என்று அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷாம்லி.
விஜய் நடிக்கும் புலி படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம். சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.