பேஸ்புக்கில் பணம் அனுப்ப புத்தம் புது வசதி !

பேஸ்புக் நிறுவனம் வரைவில் மெசேஜிங் அப்ளிக்கேஷன் மூலம் நண்பர்களுக்கு பணம் அனுப்பவும் மற்றும் பெறுவதற்கும் ஒரு புதிய அப்ளிக்கேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் பணம் அனுப்ப புத்தம் புது வசதி !
இந்த சேவை PayPal மற்றும் ஸ்நெப்சேட் உள்ளிட்டவை இணைந்து வங்கி கணக்குகள் அல்லது கிரேடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களுடைய பணத்தை அனுப்பலாம்.

இந்த சேவை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களில் உபயோகப் படுத்தலாம்.

உலகின் மிகப் பெரிய சமூக நெட்வொர்க்கான பேஸ்புக் நிறுவனம் பணம் செலுத்தும் முறைகளை செயல்முறைப்படுத்தியும் மற்றும் அதன் சேவை பாதுகாப்பு அம்சங்களையும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணத்தை அனுப்ப, பேஸ்புக் மெசெஞ்ஜர் அப்ளிகேஷனில் ஸ்டிக்கர்கள் அல்லது ஒரு தம்ஸ் அப் அடையாளம், புகைப்படங்கள் அனுப்பும் பட்டன்களுக்கு அடுத்து ‘$’ என்ற புதிய பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்தை டைப் செய்து வலதுபக்கத்தில் மேல் மூலையில் உள்ள ‘பே’ என்ற பட்டனை களிக் செய்து பின்னர் டெபிட் கார்டு நம்பரை என்டர் செய்ய வேண்டும். 

முதல் முறையாக பணத்தை பெற்றுக் கொள்ள, கார்டு எண்ணை என்டர் செய்ய வேண்டும். 
நீங்கள் ஒரு முறை கார்டு நம்பரை சேர்த்ததும், இந்த சேவைக்கென்று  பிரத்தியேகமாக ஒரு பின் நம்பரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அதை என்டர் செய்தால் தான் நீங்கள் அடுத்த முறை பணம் அனுப்ப முடியும்.

பணம் பெறுவதற்கு ஒரு முறை மட்டும் உங்கள் டெபிட் கார்ட் நம்பரைக் கொடுத்தால் போதுமானது. 

ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும்.
Tags:
Privacy and cookie settings