உத்தரபிரதேசத்தில் பால் பாக்கெட்டுகளில் சோப்பு தூள் கலந்திருப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள மதர்ஸ் டெய்ரி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பால் பாக்கெட்டில் சோப்பு தூள் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் பால் பாக்கெட்டுக்களை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியதாகவும் அந்த ஆய்வின் முடிவில் சோப்பு தூள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சை பற்றி மதர்ஸ் டெய்ரி நிறுவனம் கூறுகையில், தங்கள் நிறுவன பாலில் சோப்பு பவுடர் கலக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனம், தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, பாக்கெட் உணவுப் பொருட்கள் தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது பாலில் சோப்புத்தூள் கலந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.