இந்தியா- வங்கதேச அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் மோதிக் கொண்ட டோனி, ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மிர்புரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் துடுப்பாட்டக்காரர்கள் பாதையில் குறுக்கிட்டவாறு இருந்தார். இதனால் 4வது ஓவரின் போது ரோஹித் சர்மா விரலை காட்டி அவரை எச்சரித்தார்.
இந்நிலையில் 25வது ஓவரில் டோனி ஓட்டங்கள் எடுக்கும் போதும் ரஹ்மான் குறுக்கே வர, அவரை டோனி இடித்து தள்ளினார். இதில் கீழே விழுந்த ரஹ்மான் களத்தை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் போட்டி நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. இதனை நடுவர்கள் விசாரித்ததில் இருவரும் ஐசிசி விதிமுறையை மீறியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போட்டி சம்பளத்தில் இருந்து டோனிக்கு 75 சதவீதமும், ரஹ்மானுக்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.