இன்றைய உலகில் பலருக்கு தூக்க மின்மை என்பது ஒரு வியாதி யாகவே இருந்து வருகிறது.
இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர்.
உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டு வருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின்.
இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்து வருகின்றனர். மருத்துவத் துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும்.
ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்த தவறி வருகிறோம்.
ஆதிகாலங் களில் ஒவ்வொரு உணவுப் பண்டமும் மனித உயிருக்கு வலுவூட்டும் விதமாக இருந்தது.
ஆனால் நாகரீகம் மாறிய பின்னர் இயற்கையாக நமக்கு கிடைத்த சத்துள்ள உணவுகளை கூட, ருசிக்காக பல்வேறு வேதியியல் பொருட்களை சேர்த்து சத்தில்லாத உணவாகத் தான் உண்டு வருகிறோம்.
தூக்கம் வராமல் தவிக்கும் மனிதர்களுக்காக இதோ 5 வரப்பிரசாதங்கள் தயாராக உள்ளது. வாருங்கள் இந்த வரப்பிரசா தங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இனி மாத்திரையை தேடி ஓடாமல், கீழ்கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக உறங்குங்கள்.
தூக்கத்தின் உறைவிடம் செர்ரி:
மனிதன் தூங்குவதற்கு மூலகாரணமாக உள்ள மெலடோனின் வேதியியல் பொருள் செர்ரி பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் இரவில் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 2 முதல் 5 செர்ரி பழங்களை சாப்பிட்டால்,
அதில் உள்ள மெலடோனின் திரவம் ரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்று தூக்கம் வருவதற்காக சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும்.
வாழைப்பழம்:
இதில் இயற்கையிலேயே பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் எல்ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலமும் உள்ளது.
வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் அமினோ அமிலம் ரத்தத்தில் கலந்து எச்டிபி என்ற வேதிப்பொருளாக மாறி மூளைக்கு செல்கிறது.
பின்னர் அதில் நடக்கும் மாற்றங்களால் செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறி தூக்கத்தை வரவழைக்கிறது.
ஓட்ஸ் கஞ்சி:
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து, அதன் மூலம் இன்சுலீன் ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்துகிறது.
இன்சுலின் மந்த நிலையை உருவாக்கி நம்மை தூக்கத்தில் ஆழ்த்துகிறது. ஓட்ஸ் மற்றும் டோஸ்ட் இரண்டுமே இன்சுலின் சுரப்பதன் மூலம் தூக்கத்தை வரவழைக்கிறது.
சூடான பால்:
மேற்கண்ட அனைத்தை பற்றி நமக்கு பெரிய அளவில் தெரியா விட்டாலும் நாம் தினமும் குடிக்கும் பாலை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத்தில் உள்ளதை போலவே எல்ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலில் அதிகம் உள்ளது.
இதனால் பாலை குடித்தவுடன் அது ரத்தத்தில் கலந்து செரடோனின் வேதிபொருளாக மாறி உறக்கத்தை வரவழைக் கின்றன.
மேலும் கால்சியமும் உறக்கத்தை அதிகரிக்க ஏதுவானது. பாலில் இது அதிகம் உள்ளதால் இதை குடித்தால் தூக்கம் வருவதற்கான மூலக்கூறுகள் அதிகமாகும்.
டோஸ்ட்:
மாவுச்சத்துள்ள உணவு வகைகள் அனைத்துமே தூக்கம் வருவதற்கு ஏதுவானதாகும். மாவு சத்துள்ள உணவுகள் அனைத்துமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கும் தன்மையுடையது.
இன்சுலின் தூக்கத்தை தூண்டும் ஒரு வேதிப்பொருளாகும். மாவுச்சத்துள்ள உணவுகளில் நாம் சாப்பிடும் பிரட் டோஸ்ட் முக்கியமானதாகும்.
இதை நாம் பெரும்பாலும் காலை நேர உணவாகவே பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இரவு நேரங்களில் இதை சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள இன்சுலின் ஹார்மோன்கள் ஒருவித மந்த நிலையை ஏற்படுத்தி தூக்கம் வரவழைக்கும்.