ஷூவில் இருந்து மின்சாரம் உற்பத்தி !

1 minute read
மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் பல்வேறு வகையிலும் தொடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஷூவில் இருந்து மின்சாரம் உற்பத்தி !
பெரிய அளவிலான உற்பத்தி முதல் குறைந்த அளவிலான மின் தேவைகள் வரை மாற்று எரி சக்தியிலிருந்து பெறுவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்றவை நாம் அறிந்தது தான்.

அது போலவே மனித உடல் இயக்கங் களிலிருந்து கூட குறைந்த அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.

நாம் நடக்கும் போது ஏற்படும் அழுத் தத்தைக் கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதற்கு ஏற்ப ஷூக்கள் உருவாக்க பட்டுள்ளன.

இதை அணிந்து கொண்டு நடந்தால் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகி ஷூ-வோடு இணைக்கப் பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப் படுகிறது. 
இந்த மின்சாரத்தைக் கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கேமரா போன்ற குறைந்த மின் பயன்பாடுகள் கொண்ட சாதனங்களை இயக்கலாம்.

ஸ்மார்ட் போன் வைத்திரு ப்பவர்கள் கையோடு சார்ஜர் அல்லது பவர் பேங்கை தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை. இந்த ஷூ வை மாட்டிக் கொண்டு நடந்தால் போதும். உடனடி மின்சார தேவைக்கு ஓடவும் செய்யலாம்.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings