மிக குறைந்த வயதில் டிரக் ஓட்டி இளம்பெண் சாதனை !

இங்கிலாந்து நாட்டில் மிக குறைந்த வயதில் டிரக் ஓட்டும் தகிதியையும் உரிமத்தையும் 18 வயது இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார். 
மிக குறைந்த வயதில் டிரக் ஓட்டி இளம்பெண் சாதனை !
இங்கிலாந்து நாட்டின் இளம் வயது பெண் டிரக் ஓட்டுனர் என்னும் பெருமையை ஜெஸ் ஸ்டப்ஸ் பெற்றி ருக்கிறார்.18 வயதான இவரது பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் டிரக் ஓட்டுனர்களாக உள்ளனர். 

சிறு வயது முதலே தான் ஒரு சிறந்த டிரக் ஓட்டுனராக இருக்க வேண்டுமென லட்சியத்தோடு வளர்ந்த ஜெஸ், தனது 18 வது வயது அதற்கான முதல் படியை கடந்துள்ளார்.

தனது லட்சியத்தை நறைவேற்ற வெற்றிகரமாக முதற்படியை தாண்டியிருக்கும் ஜெஸ் இது குறித்து கூறுகையில், 

டிரக் ஓட்டுவது கடினமான செயலென்றாலும், ஓட்ட பழகி விட்டால் பிறகு இந்த தொழிலை விட்டு விலக மனம் வராது.
பல்கலைக்கழகத்திற்கு சென்று படிப்பதை விட, மனதிற்கு பிடித்தவற்றை செய்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

 இந்த துறையை பொருத்தவரை பெரும்பாலான டிரக் ஓட்டுனர்கள் ஆண்களாகவே உள்ளனர். தற்போது, நிறைய பெண்களும் இந்த துறையில் கால் பதிக்க தொடங்கியுள்ளனர்.

 இந்த தொழிலில் பிடித்ததே, எங்கு செல்ல போகிறோமென முன்பே தெரியாமல் இருப்பதுதான் எனக்கூறும் ஜெஸ்ஸின் சகோதரியான 24 வயது லூசியும் டிரக் ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings