வீரபத்ராசனம் | virabadrasana !

செய்முறை:

1. கைகளை பக்க வாட்டில் வைத்து நேராக நிற்கவும்.

2. இரண்டு கைக ளையும் மேலே உயர்த்தி உள்ளங் கைகளை இணைத்து கூப்பிய நிலை யில் வைக்கவும்.


3. நன்றாக மூச்சை இழுத்து ஒரு குதியுடன் கால்களை அகட்டி அகலமாக வைக்கவும்.

4. மூச்சை வெளி விட்டு வலது பாதத்தை வலது பக்கம் முழுவது மாகத் திருப்பி வலது பக்கம் திரும் பவும்.

5. வலது காலை மடக்கி வலது தொடை தரைக்கு இணை யாக இருக்கு மாறு வைக்கவும். இடது காலை முழங் காலில் மடங்காமல் நேராக நிற்க வேண்டும்.

6. இந்த நிலையில் 2 வினாடிகள் இருந்த பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு: இதே முறையில் இடது பக்கமும் செய்யவும்.

பலன்கள்:

1. இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

2. மார்பு விரி வடைந்து சுவாசம் எளிதாகிறது.

3. கால்கள் வலுப்பெறு வதோடு கழுத்து இறுக்கத்தை சரி செய்கிறது.
Tags:
Privacy and cookie settings