லண்டனில் இந்திய ராணுவமும் இங்கிலாந்து ராணுவமும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்த பயிற்சி முடிந்து முகாமிற்கு திரும்பும்போது வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் 21 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
தென்மேற்கு இங்கிலாந்தில் இந்திய- லண்டன் ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. 28-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
நேற்று மாலை சலிஸ்பர்ரி பிளைன் என்ற இடத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு ராணுவ வாகனங்களில் முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை லண்டனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஓட்டி வந்தார்.
திடீரென அந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 21 பேரும், இங்கிலாந்து ராணுவம் தரப்பில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
அவர்களை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வீடியோவுக்கு இங்கே செல்லவும்!கேப்டன் மற்றும் ஹவில்தாரை தவிர மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இரண்டு பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.