நீடாமங்கலம் அருகே துவரம் பருப்பு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது !

வலங்கைமானை அடுத்த நீடாமங்கலம் அருகே துவரம் பருப்பு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


விற்பனை பொதுவினியோக திட்டத்தில் நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதற்காக 30 டன் துவரம் பருப்பு மூட்டைகளுடன் லாரி ஒன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பேரணியூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த லாரியை கடலூர் மாவட்டம் தெம்மூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் சரவணன் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் விஜி என்ற கிளீனரும் இருந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைத்தெருவுக்கு லாரி வந்தபோது டிரைவர் சரவணன் பேரணியூர் செல்ல வழி கேட்டார்.

இதில் யாரோ டிரைவருக்கு தவறுதலாக தஞ்சை அருகே உள்ள பேரையூர் என்ற ஊருக்கு வழி சொல்லியதாக தெரிகிறது. இதனால் டிரைவர் லாரியை தஞ்சை சாலை வழியாக ஓட்டி சென்றார்.

பள்ளத்தில் கவிழ்ந்தது செல்லும் வழியில் டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து நீடாமங்கலம் அருகே லாரியை நிறுத்தி அங்கு இருந்தவர்களிடம் பேரணியூருக்கு வழி கேட்டார்.

அப்போது அங்கிருந்தவர்கள் நீடாமங்கலம் சென்று அங்கிருந்து மன்னார்குடி வழியாக சென்றால் பேரணியூருக்கு செல்லலாம் என கூறினர். இதனை தொடர்ந்து டிரைவர் லாரியை மீண்டும் நீடாமங்கலம் நோக்கி ஓட்டினார்.

ஒரத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சரவணன், விஜி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
Tags:
Privacy and cookie settings